செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

ஓட்டு போடுவோம்

எது இந்தியாவை வாக்களிக்கச்செய்யும் ?                  

 

ஆஅ….. அதோ தெரிகிறது

ஆளுமைத்திறன் நிறைந்த

ஆட்சியாளன் வருகை;

 

பசுமையைப் பாரியாய்

பரிசளிக்கும் அரசவை

சுதந்திரக் காற்றை ஆழமாய்

சுவாசிக்கும் சுகம்;

 

மனித வளமும் கனிம வளமும்

கனிசமாய் காக்கப்பட்டு

முறையான பங்கீடு;

 

(ஆறுமணி அடிக்கிறது)

ஓ….அத்தனையும் கனவா ? அடடா…

நசுக்கப்பட்டவனுக்கு நலவாழ்வா?

கடவுள் மனிதனாகப் பிறப்பானா?

மடமை மடமை அத்தனையும் மடமை;

 

நிச்சயம் பிறப்பான்

இளைஞன் எழுச்சியுற்றால்

மனிதம் மாண்புற்றால்.......[அசரீரிசொல்கிறது]

சாத்தியமா?எப்படி?

 

கண்ணதாசன்  கேட்ட

சாவுக்கும் சாவு வந்து சேரலையே

ஜன நாயகம் ஜனரஞ்சகம் ஆகலையே.

 

கொழுத்தவனுக்கே கூழைகும்பிடு

இளைத்தவனை ஏறி மிதித்திடு

ஏட்டில் எழுதப்படா நாட்டுப்புறச்சட்டம்.

 

தவறு செய்பவன் தலைவன் ஆகிறான்,

உண்மை பொய்த்திட ஊழல் செய்கிறான்,

ஊழலை ஒழிக்க ஓட்டு போடுறோம்,

ஓட்டுக்கு வீதம் லஞ்சம் வாங்குறோம்.

 

சுய நலமில்லா பொதுநலம் எங்கே?

கடமையைச் செய்யும் விழுமியம் எங்கே ?

வீழ்ந்து அழிந்து போனது நம்மால்.

 

கல்வியியல் பட்டம் கற்பிப்போனுக்கு,     

மருத்துவர் பட்டம் வைத்தியனுக்கு,

தொழில்நுட்பப் பட்டம் பொறியியலாளனுக்கு,

ஆம் தகுதியுண்டு எல்லா பதவிக்கும்.

ஆட்சியாளனுக்கு ? ஏது தகுதி?

 

நிறைகுடம் குறை குடத்தை நிரப்பலாம்

குறைகுடம் நிறைகுடத்தைக் குறை கூறி

அடக்கியாளும் அவல நிலை.

 

பயன்படுத்தும் பொருளுக்கு தகுதி நிர்ணயம், 

வேட்பாளருக்குத்  தகுதியை  வரையறுப்பது யார்? 

தகுதி  நிறைந்த வாக்காளர்  விழி பிதுங்கி  நிற்கின்றார்

தேர்தல் சமயத்தில் விழிப்புணர்வு இல்லாமையால்.

 

விதி செய்யும் இளைஞன்; 

உணவளிக்கும் உழவன்; 

கல்வியில்லா சாமான்யன்;

அனைவருக்கும் அவசியம்

தேர்தல் விழிப்புணர்வு.

 

இனிபோதும் சின்னச்சின்னச் திருத்தங்கள்,

வேட்புமனு தாக்கலப்போ ஒரு சிறு நேர்காணல்;

உடல் உள்ளம் நலமா?

வழக்கேதும் உண்டா வேட்பாளர் மீது?

ஒட்டுமொத்த சொத்துமதிப்பு எத்துனை?

அத்தனைக்கும் வருமான வரி

முறையாகச்  செல்கிறதா?

 

தொடர்பான சான்றிதழ்கள்

பரிசீலனை போதும்

நேர்மையைப் பறைசாற்றும்.

 

எந்தகட்சி கெலிக்கு மென்ற

கருதுக்கணிப்பு நிகழ்சிகளை  

அடியோடு நிறுத்திவிட்டு,

 

தகுதி நீக்கப்பட்டியலைத் தீர்மானம் செய்வதனால்

குறைந்த பட்சத் தகுதியை வரையறை செய்வதனால்

இந்தியாவை முழுமையாய் வாக்களிக்கச் செய்திடலாம்

வளம்பெறும்பாரதம்;புகழ்பெரும்பூமியில்.

 

 

 

1 கருத்து:

ஓட்டு போடுவோம்

எது இந்தியாவை வாக்களிக்கச்செய்யும் ?                     ஆஅ ….. அதோ தெரிகிறது ஆளுமைத்திறன் நிறைந்த ஆட்சியாளன் வருகை...