செவ்வாய், 20 ஜூலை, 2021

ஆசிரியர் பெருமை

                             ஆசிரியர்........

                        

அழகியல்  உணர்வில் அணுவணுவாய்
ஆய்ந்துருவாக்கிய இணையில்லா
இயற்கையை இறைவன் பரிசளித்தான்
அற்புதப்படைப்பாம்  மனிதனுக்கு.

                                                                                                                                 பெற்றஅப்பரிசைஅனுபவித்தாள அறிவுரை வழங்கிடும்              ஆற்றல்மிகு கருவியாய்                           அனுப்பிட்டான்இறைவன்                                                                                       ஆசிரியர் தனையே.

 

கற்கால மனிதனின் கல்மனம்கூட
கனிவன்பு மிக்க கலைப்பொருளாக
உருமாற்றும் சமூகச் சிற்பிதான்
ஆசிரியர்.

                          

மாணாக்கர்தம் முன்னேற்றத்                                                                              தடைக்கல்லைப்படிக்கல்லாக்கும்                                                                           தரம் மிகுந்த பொறியாளன்                                                                                   ஆசிரியர்.

 

                                                                                                                                           தவற்றினை மட்டுமே தட்டிக்கேட்காது

திறமைகளை உற்றறிந்து திரைக்குப் பின்னிருந்து
புன்னகை பூத்து நிற்கும் வாசம் மிகு பூச்செடி
ஆசிரியர்.

 

காற்றிலே கரைந்து செல்லும் நறுமணம் போலவே                                 மாணாக்கர் மனத்தினில் மறைந்து                                                                 மறைமுக மகிழ்வு தரும் மாமருந்து                                                               ஆசிரியர். 

                                                                                                                                           

வாழ்க்கை மெய்ப்பாடுகளுள்
தேன்- இன் சுவையோடு வேம்பின் கசப்பையும்
இடறலின்றி கற்பிக்கும் காவலன்
ஆசிரியர்.                                         

                                                

மருத்துவன் பொறியாளன் காவலன்                                                               வழக்கறிஞன் –ஏன்? ஆசானையும்
உருவாக்கும் அமைதியான படைப்பாளி
ஆசிரியர்.

 

பணிநேரம் எட்டுமணி என்பதை மறந்திட்டு
வாழ்நாள் முழுமைக்கும் மாணவர் நலனுக்காய் கரைந்துருகும்        தாயுள்ளம் ததும்பும் பொதுநலப்பேர்வழி                                                      ஆசிரியர். 

      

அவர்,  

செல்லும் இடமெங்கும் வளம் கொழிக்கும் நீர் போல                              உலவும் இடமெங்கும் கல்வி நிலை வளர்ந்திடுமே                                  மனிதம்  உயர்ந்திடுமே மாண்பு பெருகிடுமே. 


            ஆயக்கலை அறிவிக்கும்
            ஆசிரியம்  உணர்ந்திடுவோம்
             விழிப்புணர்வூட்டிடும் ஆசானை
             மதித்திடுவோம்.

                                                                                                                                                                                                      📖🖊 📖🖊 📖🖋

ஓட்டு போடுவோம்

எது இந்தியாவை வாக்களிக்கச்செய்யும் ?                     ஆஅ ….. அதோ தெரிகிறது ஆளுமைத்திறன் நிறைந்த ஆட்சியாளன் வருகை...